சொல்லிட்டாங்க...

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டு உரிமைகள், நலன்கள் மத்தியஅரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கண்டனத்திற்குரியது. இ. கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

தமிழக அரசின் நீட் தடை மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்தது பெரிய மோசடி. இதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் எதுவுமில்லை. - மதிமு பொதுச்செயலாளர் வைகோ

கடந்த 21 மாதங்களாக அதிமுக அரசு இரட்டை வேடம் போட்டதை போல ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் போட வேண்டாம் என்று தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.  - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

Related Stories: