கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்: திமுக கேள்வி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில கோரிக்கையின் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: திருத்துறைப்பூண்டி ஆடல் அரசு (திமுக): தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் இட ஒதுக்கீட்டுப்படி நிரப்பவில்லை. அமைச்சர் ராஜலட்சுமி: ஆதிதிராவிடர் நலத்துறையில் எஸ்இ பிரிவினருக்கு 1,234 பணியிடங்களும், எஸ்டி 614 இடங்களும் பின்னடைவு பணியிடங்கள் உள்ளது. அதை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார்: 17,000 காலிப்பணியிடங்களை எந்தவித புகாரும் எழாத வகையில் நிரப்பப்பட்டுள்ளது.  ஆடல்அரசு: திமுக ஆட்சிகாலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டும் வீடுகள் கட்ட முடியாமல் பல பிரச்னைகள் உள்ளது. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், துணை முதல்வரும் நேரடியாக பார்வையிட்டு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார்கள். ஆடல்அரசு: பசுமை வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள். ஆனால் அதில் மணல் தட்டுப்பாடு உள்ளது. அரசே மணல் வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளால் உள்ளாட்சி செயல்படாமல் இருப்பதால், அவற்றுக்கு நிதி பரிந்துறைகள் வழங்கப்பட வேண்டும். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும்.

Related Stories: