தாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணையில் சூலூர் விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணையில் தற்போது தண்ணீர் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை அணையின் மைய பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியது. இந்த ஹெலிகாப்டர் கோவை சூலுார்  விமானப்படைக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவர்கள் ஒயர்லெஸ், ஜிபிஎஸ் கருவி உதவியுடன் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் ஹெலிகாப்டர் உப்பாறு அணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வாக வட்டமிட்டு பறந்து சென்றது. அணைப்பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கியதை அப்பகுதி விவசாயிகள் படம் பிடித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டனர். இந்த பதிவு வைரலானது. ஹெலிகாப்டர் அணைப்பகுதியில் தரை இறங்கியது குறித்து தாராபுரம் சார்  ஆட்சியர்   விசாரணை நடத்தவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: