அமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது

கோவை:  கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (34). இவர் இடையர்பாளையம் பிரிவில் வெளிநாடு செல்ல விசா பெற்று தரும் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு  ஆட்களை அனுப்பி வந்தார். இவரிடம் அமெரிக்கா செல்ல 3 பேர் அணுகினர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து நேர்முக தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்புக்கு அழைப்பு வந்தது. அங்கே சென்ற 3 பேர், அதிகாரிகள் முன் ஆஜரான போது  அந்த  ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. புகாரின்பேரில் போலி ஆவணங்களை தயார் செய்த அருண்குமார், அவருக்கு உதவியாக இருந்த  அசோக் (25), நிவேஷ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: