கோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா

கோவை: கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் பொருத்தி கொள்ளும் வகையில்  70 கண்காணிப்பு கேமரா நேற்று வழங்கப்பட்டது.  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசார், உயிர் அமைப்பு சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு சட்டை காலரில் பொருத்தும் வகையிலான 70 கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கோவை  மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கலந்து ெகாண்டு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கோவை நகரில் பொது இடங்களில் மக்களின் நடவடிக்கை, போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க உயிர் அமைப்பு சார்பில் 20.50 லட்ச ரூபாய் நிதியுதவியில் 70 கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது.

இதில் 20 கேமராக்களில் சிம்கார்டு  பயன்படுத்த முடியும். பதிவாகும் காட்சிகளை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக காணலாம். 50 கண்காணிப்பு கேமராக்களில் 8 மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த கேமரா மூலமாக போக்குவரத்து விதிமுறை  மீறல் எப்படி நடக்கிறது, வாகன ஓட்டிகள் போலீசாரிடம் எப்படி நடக்கிறார்கள், போலீசார் பொதுமக்களை எப்படி அணுகுகிறார்கள், அபராதம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்ற விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். கேமரா  இருப்பதால், அபராதம் வசூல் போக்குவரத்து விதிமுறை மீறலில் தவறு நடக்க வாய்ப்பு இருக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: