×

சென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஆட்டோமேடிக் இயந்திரம் மூலம் ரத்த அழுத்த, சர்க்கரை மாத்திரை

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
* சென்னை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.
* புற்று நோய் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு,  நடப்பாண்டில் ஒரு லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி ₹16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* தற்கொலைகளை தடுப்பதற்காக 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லா ‘104’ தொலைபேசி சேவை வழியாக ஆலோசனை வழங்கும் மையம், ₹6.72 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.
* காச நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியில்  உள்ள 5 நகர்ப்புற சுகாதார மையங்களில் புதிய முயற்சியாக,  28 வகையான மருந்துகள் வழங்கும் 32 தானியங்கி இயந்திரங்கள் ₹80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.



Tags : Chennai, automatic machine, Blood pressure, sugar pill
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்