×

நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை

சென்னை: நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த 8 திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. சென்னையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அம்மா உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும் அதன்  செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய  சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் துணை தலைவராக மாநகர நல  அலுவலர் செந்தில்நாதன், உறுப்பினர் செயலராக கூடுதல் மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மாநகர நல அலுவலர் (தெற்கு) மகாலட்சுமி, 15வது மண்டல அலுவலர் கார்த்திகேயன், 7 வது மண்டல  அலுவலர் சீலா, சுகாதார அலுவலர்கள் சேவியர் அருள்ராஜ், வெங்கடேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது. கடந்த 16ம் தேதி மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ் தலைமையில் குழுவின் கூட்டம் நடந்தது. இதில் அம்மா உணவகங்களின் செயல்பாடுகள், நஷ்டத்தை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், லாபத்தை ஈடுகட்ட செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பிறகு 8 திட்டங்கள் இறுதி  செய்யப்பட்டு இதுதொடர்பாக பவர் பாயிண்ட் அறிக்கை ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.


Tags : loss, upgrade, government soon
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...