எர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து எரித்து பேரல்கள் கொள்ளை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எர்ணாவூர் அருகே பாரத் நகர் சந்திப்பில் மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் சேகரமாகும் குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையை பிரித்து அதை பேரல்களில் வைத்து பதப்படுத்தி உரமாக்கும் பணியும் நடக்கிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு மர்ம நபர்கள் சிலர் வந்து மது அருந்திவிட்டு கூடத்தின், நுழைவு வாயிலை உடைத்து அங்கு குப்பை பதப்படுத்த வைத்திருந்த 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 நெகிழி பேரல்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

 
Advertising
Advertising

பின்னர் திருட்டு சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க கூடத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில், தரம் பிரித்து வைத்திருந்த குப்பை கூடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேரல்களை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: