மருந்து கடைக்காரருக்கு வெட்டு

சென்னை: வடபழனி அழகிரி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராம வள்ளியப்பன் (31). மருந்து கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்து உடல் வலிக்காக மருந்து கேட்டுள்ளார். ராம வள்ளியப்பன் திரும்பியபோது வாலிபர் அரிவாளால் ராம வள்ளியப்பனை வெட்டிவிட்டு தப்பினார்.இதில் அவர் படுகாயமடைந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வடபழனி, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலா (26) என தெரிந்தது.

Advertising
Advertising

விசாரணையில்  பாலாவின் தாய் மருந்து வாங்க கடைக்கு வந்தபோது ராம வள்ளியப்பன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அவரை அரிவாளால் வெட்டியது தெரிந்தது. எனவே போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர்.

Related Stories: