தனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது, இங்கு அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 15ம் தேதி ஒரு தற்கொலை நடந்தது.தற்போது இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி பயின்று வரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா (21) கடந்த 26.5.2019 அன்று 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertising
Advertising

அதேபோல் 27.5.2019 அன்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித் சௌத்ரி (19) விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15.7.2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தர்சன் (18) மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த 3 நபர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வழக்கினை குற்றவியல் குற்ற புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டுள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: