சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பஷீல் (40), நாகப்பட்டினம் அப்துல்ஆசிம் (41) ஆகியோர் துபாய்க்கு சுற்றுலா பயணிகளாக சென்று திரும்பினர். அவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. பஷீலின் பேன்ட்டை சோதனை செய்தபோது இடுப்பு பகுதியில் தங்க செயின்களை வைத்து மறைத்து தையல் போட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

மேலும் அவர்கள் உள்ளாடைகளில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 900 கிராம் தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹31 லட்சம்.இதைதொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ரகமதுல்லா (46) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது ஆசனவாயில் 700 கிராம் எடை கொண்ட தங்க கட்டி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹24 லட்சம். ஒரேநாளில் ₹55 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர். வெளிநாட்டு கரன்சி சிக்கியது துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த நாகூரை சேர்ந்த இனையதுல்லா (41) என்பவரை சோதனை செய்தபோது ₹13 லட்சம் சவுதி ரியால் மறைத்து வைத்திருந்து தெரிந்தது. எனவே அவரை கைது செய்தனர்.

Related Stories: