‘என்னுடன் பழகாவிட்டால் வெட்டுவேன்’ போலீஸ்காரர் மீது செவிலியர் புகார்

பெரம்பூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (30). இவர் ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி ஒரு புகாரளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான், ஊட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியபோது கோவை புதூர் நகரை சேர்ந்த போலீஸ்காரர் விக்னேஷ் என்பவர் தனது தந்தை விபத்து சிகிச்சைக்காக வந்து சென்றபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தோம்.

எங்களது காதல் விவகாரம் இரு வீட்டிற்கும் தெரியவர இருவரும் காதலை முறித்து கொண்டோம். பின்னர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் சென்னைக்கு வந்து தன்னிடம் பழகுமாறு வற்புறுத்தினார். காதலிக்கவில்லை என்றால் இருவரும் தனிமையில் எடுத்த புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார். நான், பணிபுரியும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து என்னை தாக்கினார். தினமும் போன் செய்து ‘என்னுடன் பழகாவிட்டால் ஊருக்கு வந்து வெட்டுவேன்’ என்றும் மிரட்டினார். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் பெண்க வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செவிலியரை மிரட்டிய போலீஸ்காரர் குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>