சவாரி ஏற்றி வந்த 38 பைக் பறிமுதல்

சென்னை: சென்னை உள்ளிட்ட இடங்களில் டூ வீலர் டாக்சிகள் தடையை மீறி இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று மீனம்பாக்கம் பகுதியில் இத்தகைய டாக்சிகள் செயல்படுவதாக அங்குள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் சோதனை நடத்தி 38க்கும் மேற்பட்ட டாக்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற டாக்சிகளை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது என ேபாக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: