அமெரிக்காவில் தகுதி அடிப்படை குடியுரிமை 57% ஆகிறது

வாஷிங்டன்: அமெரிக்க  அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்பின் மருமகனும், அவருடைய முதன்மை ஆலோசகருமான ஜரெட்  குஷ்னர் பேசியதாவது:  தகுதி  அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை கனடாவில் 53, ஆஸ்திரேலியாவில் 63, ஜப்பானில் 52 சதவீதமாக உள்ளது. எனவே, அமெரிக்காவில் 12 சதவீதமாக இருக்கும் தகுதி அடிப்படையிலான  குடியுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 11 லட்சம் பேருக்கு,  ஆண்டு தோறும் வழங்கப்படும் குடியுரிமை எண்ணிக்கையில் எந்த மாற்றமும்  இருக்காது என்றார்.

Advertising
Advertising

Related Stories: