×

சில்லி பாயின்ட்...

* ஜகார்தாவில் நடைபெறும் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார். இப்போட்டி 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை 59 நிமிடம் போராடி வென்றார்.
* ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.
* ஜெ2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒத்திகையாக நடந்த மகளிர் வில்வித்தை போட்டியில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். கொரிய வீராங்கனை அன் சான் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
* ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 22ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரின் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் லீக் சுற்றில் களமிறங்குகின்றன. ஆண்கள் பி பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தையும், சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் பி பிரிவிலும் இந்திய அணி 3-0 என இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்காவை எளிதாக வென்றது.

Tags : Chili Point ...
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...