அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார் ராய்

லண்டன்: அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணியில், அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணி, அடுத்து அயர்லாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 24ம் தேதி தொடங்க உள்ள இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 443 ரன் குவித்த ஜேசன் ராய், முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற உள்ள பிரபல ஆஷஸ் தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்கும் உத்தேச இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கான அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, ஜாக் லீச், ஜேசன் ராய், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.ஆஷஸ் உத்தேச அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, ஜாக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Tags : Roy , named , Test squad ,Ireland
× RELATED அயர்லாந்து பிரதமர் கோவா வருகை