கிராமங்களில் 80,000 கோடியில் 1.25 லட்சம் கிமீ சாலை போடப்படும்

புதுடெல்லி:  மக்களவையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.   அப்போது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3வது கட்டமாக 1.25 லட்சம் கிமீ.க்கு 80 ஆயிரம் கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் 2024-25ம் ஆண்டுகளில் முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 99 சதவீத ஊழியர்கள் நேரடியாக வங்கி கணக்குகளில் இருந்து ஊதியத்தை பெறுகின்றனர். இதில் எந்த இடைத்தரகரும்  கிடையாது,” என்றார்.

Related Stories: