தற்கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்: பெற்றோர் சண்டையால் விரக்தி

பாகல்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் 15 வயது சிறுவன். தற்போது, ஜார்கண்டில் வசித்து வருகிறான். இவனுடைய தந்தை ஒரு அரசு அதிகாரி. ஜார்கண்டில்  உள்ள தியோகரில் பணியாற்றி வருகிறார். அவரது தாய், பாட்னாவில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார்.    இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு அந்த சிறுவன் ஒரு கடிதம் எழுதியுள்ளான். இதை பார்த்த ஜனாதிபதி அலுவலகம், அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.  கடிதத்தில் அந்த சிறுவன் கூறியுள்ளதாவது:

எனது பெற்றோர் இருவரும் மோசமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால், எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனது தந்தைக்கு புற்றுநோய் இருக்கிறது.
Advertising
Advertising

எனது தாயின் உத்தரவின் பேரில் சமூக விரோத சக்திகளால் எனது தந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நான் வாழ்வதற்கு விரும்பவில்லை. எனவே, எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு அனுமதி அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளான். இந்த கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள ஜனாதிபதி மாளிகை, அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் பாகல்பூர் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: