துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட எம்எல்ஏ சாம்பியன் பாஜவில் இருந்து நீக்கம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், கான்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ.வாக இருப்பவர் பிரணவ் சிங் சாம்பியன். இவர் சமீபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஆடினர். அப்போது, அவர் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி இருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அவரை பாஜ மேலிடம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது.  இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பாஜ ஊடக பிரிவு தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்பி அனில் பலுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், `‘பிரணவ் சிங் சாம்பியனின் தொடர் மோசமான நடவடிக்கைகளால். அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளோம்,’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: