ரயில்வே துறையில் 3.74 லட்சம் கோடியில் 189 புதிய வழித்தடங்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி:  மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது; ரயில்வே திட்டங்களுக்கு மண்டலம் வாரியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் வரை புதிய வழித்தடங்கள் அமைக்கும் திட்டங்களுக்கான செலவு 76,917 கோடியாகும். 2019 ஏப்ரல் 1ம் நிலவரப்படி 189 வழித்தடங்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது. 2,555 கி.மீ. தூரத்துக்கு 189 புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணி ₹3 லட்சத்து 74 ஆயிரத்து 753 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் செயல்படுத்தல், திட்டமிடல் அல்லது அனுமதி அளித்தல் உட்பட  பல்வேறு நிலைகளில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: