சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து வெளியேற்றுவோம்: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: ‘‘சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டின் எந்த மூலையில் குடியேறி இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்,’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.அசாமில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் பேரில் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், பதிவு செய்தவர்களின் இறுதி விவரத்தை வெளியிட வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா? என சமாஜ்வாடி எம்பி ஜாவீத் அலிகான், மாநிலங்களவையில் நேற்று துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலில், ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பாஜ கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு திட்டமாகும். இதன்படி, இந்தியாவின் எந்த மூலையிலும் சட்ட விரோதமாக வெளிநாட்டினர்  குடியேறி இருந்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு சர்வதேச சட்டப்படி நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.   

Advertising
Advertising

 தொடர்ந்து பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எந்த தவறும் இன்றி அமல்படுத்தப்படும். உண்மையான குடிமகன் யாரும் விடுபடக்கூடாது என்பதே மத்திய அரசின் எண்ணம்’’ என்றார். தொடர்ந்து, ‘நாட்டில் எத்தனை ரோகிங்கியா முஸ்லிம்கள் உள்ளனர்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நித்யானந்தராய், `‘ரோகிங்கியா முஸ்லிம்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளனர். எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் இல்லை. சிலர் வங்கதேசத்துக்கு திரும்பிவிட்டனர்’’ என்றார்.

1083 ஊழியர்கள் டிஸ்மிஸ்

மற்றொரு எழுத்துப்பூர்வமான கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், ‘`கடந்த 5 ஆண்டுகளில் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 1,083 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதுமான பணித்திறமை இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் நீக்கப்பட்டனர்,’’ என்றார்.

Related Stories: