பிராந்திய மொழியில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியீடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். இதில் 100 முக்கிய வழக்குகளின் நகல்களை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழங்கினார். இதில், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒடியா, மராத்தி, அசாமி ஆகிய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தமிழ்மொழி இடம்பெறவில்லை. விரைவில் மற்ற மொழிகளிலும்  தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டரில், ``தீர்ப்புகள் மொழி பெயர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட பிராந்திய மொழியில் தீர்ப்பை தெரிந்து கொள்ள முடியும்’’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: