நிலத் தகராறு உத்தரப் பிரதேசத்தில் 9 பேர் சுட்டுக் கொலை: 19 பேர் காயம்

சோன்பத்ரா: உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் பலியாயினர், 19 பேர் காயம் அடைந்தனர். உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சபாஹி கிராமம். இங்கு தலைவராக உள்ளவர் யக்யா தத். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நிலம் தகராறு காரணமாக நீண்டகாலம் பிரச்னை இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக யக்யா தத் ஆதரவாளர்கள், எதிர் தரப்பினர் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இது மோதலாக மாறியதால், யக்யா தத் ஆதரவாளர்கள், எதிர் தரப்பினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாயினர், 19 பேர் காயம் அடைந்தனர் என மாவட்ட கலெக்டர் அங்கித் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: