என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்த் நினைவு நாளில் சுடுகாட்டில் ‘டிக்டாக்’ செயலியில் போலீசை கண்டித்து கானா பாடல்: பாடகர் உட்பட 6 பேர் கைது

சென்னை: என் கவுன்ட்ரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ராயப்பேட்டை ரவுடி ஆனந்த் நினைவு நாளில், டிக்டாக் செயலியில் காவல் துறையை கண்டித்து கானா பாடல் பாடிய ரவுடியின் ஆதராவாளர்களான கானா பாடகர் உட்பட 6  ேபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி நள்ளிரவு தனியாக சென்ற இளம் பெண்களை சிலர் கேலி செய்வதாக ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதைதொடர்ந்து ராயப்பேட்டை காவல்  நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் ராஜவேலு தனியாக சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் காவலரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட ஓட விரட்டி  அரிவாளால் வெட்டினான். இந்த சம்பவம் போலீசாரிடையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து தலைமறைவாக இருந்த ரவுடி ஆனந்தை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஜூலை 3ம் தேதி தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பிடித்தனர்.  அப்போது தனிப்படையில் இருந்த மயிலாப்பூர் உதவி  ஆய்வாளர் இளையராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி ஆனந்த் தப்பிக்க முயன்றார். உடனே உதவி கமிஷனர் சுதர்சனன் தற்பாதுகாப்புக்காக ரவுடி ஆனந்தை தனது துப்பாக்கியால்  என்கவுன்டரில் சுட்டு கொன்றார்.

 இந்நிலையில் ரவுடி ஆனந்த் நினைவு நாள் கடந்த 3ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது, ரவுடி ஆனந்த் அடக்கம் செய்யப்பட்ட மயிலாப்பூர் கைலாசபுரம் சுடுகாட்டில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.அப்போது, காவல் துறை என்கவுன்டரில் சுட்டு கொன்றதை கண்டிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ரவுடி ஆனந்த் அடைக்கம் செய்யப்பட்ட இடத்தில் ‘டிக்டாக்’ செயலியில் ஆரவாரத்துடன் கானா பாடல்கள் பாடி கடும் கண்டனம்  தெரிவித்து பதிவு செய்தனர். இது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ராயப்ேபட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதைதொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  அப்போது, ரவுடி ஆனந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் டிக்டாக் செயலியில் கானா பாடல் பாடிய அவரது ஆதரவாளர்களான பல்லாவரம் அனகாபுத்தூர்  கென்னடி நகர் முதல் தெருவை சேர்ந்த கானா பாடகர் மணிகண்டன்(எ) சேட்டு(29),  திருவல்லிக்கேணி துவாரகா நகர் 1வது தெருவே சேர்ந்த சுரேஷ்குமார்(18), திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 15வது தெருவை சேர்ந்த விஜய்(21), ராயப்ேபட்டை பி.எம். தர்கா 3வது தெருவை சேர்ந்த கறிக்கடையில் கறி வெட்டும் தொழில் செய்து  வரும் சமீர் பாஷா(22), திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 10 வது தெருவை சேர்ந்த கார்த்திக்(எ)காவா கார்த்திக்(25), பிரசாத்(23) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 6 பேர் போலீசார் ேநற்று அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: