பிளஸ் 1 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை: பிளஸ்1 சிறப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பிளஸ்1 சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று (ஜூலை 18) பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியாகிறது.அந்த இணையதளத்தில் ‘‘Statement of Marks HSE First Year Result - June 2019’’ என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தோன்றும் பக்கத்தில் பதிவு எண், பிறந்த தேதியை அளித்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்  செய்துகொள்ளலாம்.

Advertising
Advertising

விடைத்தாள் நகல் பெற விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தபட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஜூலை 19, 22ம் தேதிகளில் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹275 ஐ செலுத்தி பதிவு செய்துகொள்ள  வேண்டும் என்று அரசுத்தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Related Stories: