குளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு

செம்பட்டி: அம்பாத்துரை ஊராட்சியில் குளங்களை தூர்வாரும் பணிகளை ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட அனுமார் கோயிலுக்கு பின்புறம் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். பின்னர் குளக்கரையில் உள்ள முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சீத்தாராமன் இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertising
Advertising

அங்கு பணியிலிருந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் தங்களுக்கு குறைவான ஊதியம் தரப்படுவதாக அவரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக கிராம ஊராட்சிகளை கவனிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சீத்தாராமன் தெரிவித்தார். பின்னர் குளக்கரைகளில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஆய்வின் போது ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: