சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

டெல்லி: ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில் 35 கோடியே  27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட, 57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார்.

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர், ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில் பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும் சேவை அடிப்படையில் கட்டணம்  நிர்ணயிக்கவும்,அது தொடர்பாக முன்கூட்டியை வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.

Related Stories: