செய்யாறில் நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை: நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து செய்யாற்றில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து செய்யார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கட்சிசார்பற்ற விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தினர். மேலும் கடந்த ஆண்டு வரை 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நூறு நாள் வேலை திட்டத்திற்கு தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனை கண்டித்து விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு பிட்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். மேலும் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறியதாவது, வேளாண் நிதியானது குறைவாக 2 சதவீதம் ஒதுக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பல தொழில்களுக்காக நகர்ப்புறம் நோக்கி செல்வதாகவும், மேலும் விவசாயிகள் சிலர் விவசாய கடன்களால் இறந்து போனதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனால் பட்ஜெட்டை 2 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தி விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வருவதற்காக ஆடு, கோழி, மீன்பண்ணை உள்ளிட்டவை 8 லட்சத்தில் அரசாங்கம் செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்தினால் விவசாயிகள் பிச்சை எதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவித்தும் இதுவரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார். மேலும் வறட்சி வங்கிக்கடன் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளின் தற்கொலைகள் நீடித்து வருவதாக தெரிவித்த போராட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Related Stories: