ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது : வேதாந்தா நிறுவனம் வாதம்

சென்னை : சுற்றுச் சூழல் அனுமதி உள்ள போதும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை முறையாக பின்பற்றிய போதிலும், ஆலையை முன் அறிவிப்பின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது எனவும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் துறையின் அனுமதி உள்ளதா ? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த ஸ்டெர்லைட் தரப்பு, ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் அனுமதி உள்ளது என்றும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் அரசு ஆலையை மூடியுள்ளது என்று தெரிவித்தது.  இதனிடையே வழக்கில் அடுத்தவாரம் மூன்று நாட்கள் வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

Related Stories: