பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடம்: 14 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை: பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் புதிய வேலைகளை உருவாக்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிரதம மந்திரி ரோஜ்கர் ப்ரட்ஷான் யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது . அதன்படி, ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான நிதியை  அரசயை அளிக்கும் வகையில் தொழில் தொடங்குவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது.

இந்த திட்டதால் ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2019 வரை 1 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.  இந்த மொத்த வேலை வாய்ப்பு எண்ணிக்கையில் 57% அளவில் மகாராஷ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஹாியானா ஆகிய மாநிலங்கள் பயன் பெற்றுள்ளன.  மார்ச் 2019 வரை இத்திட்டத்தில் 1 கோடியே 18 லட்சத்து ஐந்தாயிரத்து மூன்று பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் மகாராஷ்ரா 18 %-மும்,  தமிழ்நாடு 12 %-மும், கர்நாடகா 10 %-மும் பங்கு வகிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 14 லட்சத்து 17 ஆயிரத்து 808 பேர் இதன்  மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.  மொத்த எண்ணிக்கையில் 40% வேலை வாய்ப்புகள் மென்பொருள் துறையில் உருவாகியுள்ளது. வர்த்தகம், ஜவுளி, கட்மான துறைகளில் 7 % வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Related Stories: