மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி

பாகிஸ்தான் : மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயித்தை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. கடந்த 2001ல் தீவிரவாத இயக்கமாக  ஹபீஸ் சயித்தை அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து கடந்த 2002-ல் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த அமைப்பின் தீவிரவாதிகள் ஜமாத் உத் தவா என்ற பெயரில் செயல்பட தொடங்கினர். பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2008-ல் இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

இது தவிர இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயித்; பாகிஸ்தானில் செயல்படும், ‘ஜமாத் உத் தவா’ என்ற அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறான். இந்த அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் ஐநா சேர்த்துள்ளது. ஹபீஸ் சயித்தை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹபீஸ் சயித்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. ஹபீஸ் சயித்துக்கு எதிராக பாகிஸ்தானில் 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கில் லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றமானது ஹபீஸ் சயீத்திற்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயித்தை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Mumbai attack, terrorist, Hafiz Saeed, arrested
× RELATED ஈராக்கில் 250 கிலோ எடையுடைய குண்டு...