புதுச்சேரியில் வறட்சியின் பிடியில் சிக்கிய ஊசுடு ஏரி: 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் இடம் பெயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் பறவைகள் சரணாலயமாக விளங்கும் ஊசுடு ஏரி வறண்டு போனதால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து புதுச்சேரியின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான ஊசுடு ஏரியானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்டு காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்த ஏரியானது தற்போது வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து ஊசுடு ஏரி வறண்டுபோய்விட்டதால் நவம்பர் மாதம் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்காக 4 செயற்கை தீவுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் 4 செயற்கை மணல் திட்டுகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

மேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டுபோய்விட்டதால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலையங்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அங்குள்ள இயற்கை ஆர்வலர் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து வர கூடிய பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து கொண்டு செல்லும் வகையில் ஐலாண்ட் ஒன்று உருவாக்கிக்கொண்டு இருப்பதாகவும், மேலும் இந்த ஐலாண்ட்டுகளை வெவ்வேறு வகையான வடிவங்களில் உருவாக்கி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து சில ஐலாண்ட்களில் 100 முதல் 150 உள்ளூர் மரங்கள் நடும் வகையிலும், சிலவற்றில் 150 முதல் 200 மரங்கள் நடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் தெறிவித்தார். மேலும் இந்த மரங்கள் நடவதினால் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: