×

நீட் தேர்வு பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது புதிய மசோதா நிறைவேற்ற சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:  நீட் தேர்வு பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது புதிய மசோதா நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரம் நிறைவு பெற்ற பிறகு நீட் தேர்வு பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது புதிய மசோதா நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்தால் 6 மாதத்தில் அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்க விதி உள்ளது. 7 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதை கண்டிப்பதாக ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு தரப்பு அதனை ஏற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற தயார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. மசோதா நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு பதில் அளித்துள்ளதே தவிர தமிழக அரசின் கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை. தமிழக அரசின் கடைசி நினைவூட்டல் கடிதத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வராவிட்டால் வழக்கு தொடர அரசு தாயார் என மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.


Tags : NEED SELECTION, NEW BILL, LEGISLATION, MK STALLIN, REQUEST
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...