×

தீரன் சின்னமலையின் தளபதி பொல்லான் நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆங்கிலேய அரசை எதிர்த்து கடந்த 1755 முதல் 1805 வரை போராடிய தீரன் சின்னமலையின் போர் படை தளபதியாக இருந்தவர் பொல்லான். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த காரணத்தினால் பொல்லான் நல்லமங்கலப்பாளையத்தில்  தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தில் நினைவு நாளை அக்கிராம மக்கள் தொடர்ந்த அனுசரித்து வந்தனர். ஆனால் பொல்லான்  நினைவு நாளை அனுசரிக்க அப்பகுதி காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு அரசு விழா எடுப்பது போல் அவரின் போர் படை தளபதியாக இருந்த பொல்லான் தூக்கிலிடப்பட்ட ஜூலை 17ல்  அரசு விழா எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சுதந்திர போராட்ட தியாகி பொல்லானுக்கு அரசு விழா எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தியாகி பொல்லான் நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தார்.



Tags : Theeran Chinnamalai, Commander Pollan, Icort
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...