ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி?

சென்னை: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு முதுகுளத்தூர் மலேசியா பாண்டியன்(காங்கிரஸ்) பேசியதாவது:  ராமநாதபுரம் வறட்சி மிகுந்த மாவட்டம். இங்கு தரமான அரசு மருத்துவமனைகளை பார்ப்பது கடினம். முதுகுளத்தூர் மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இதை தரம் உயர்த்தி தர வேண்டும். அதேபோன்று காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

 அமைச்சர் விஜயபாஸ்கர்: அரசு மருத்துவமனைகளில் மருத்து பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதர நிலையங்களில் 584 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மலேசியா பாண்டியன்: அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பதிவேடு நுட்பனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதுகுளத்தூரில் மகளிர் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தர வேண்டும்.  அமைச்சர் விஜயபாஸ்கர்: இந்த ஆண்டு மட்டும் 8,068 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. 1508 லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: