விவிஐபி வரிசையில் வந்து கூட்டாளிகளுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பொருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரம் நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அந்த வகையில் கடந்த 1ம் தேதி முதல் பொது மக்கள் அத்திவரததை தரிசித்து வருகின்றனர். இதனால் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என்று மூன்று வரிசையாக தரசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் குடியரசு தலைவர் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர் தரிசித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.  இந்நிலையில் மதுரைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் விவிஐபிக்கள் தரிசனம் செய்யும் விரிசையில் வந்து தனது கூட்டாளிகள் மற்றும் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிவுள்ளது.

இதில் அவருக்கு கோயில் அர்ச்சகர் சிறப்பு பூைஜ செய்து பூ உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. வரிச்சூர் செல்வம் கழுத்து நிறைய தங்க நகைகள் மற்றும் கருப்பு நிற கண்ணாடி அணிந்து கொண்டு தரையில் அமர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் தரிசனம் செய்தார். அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ெபாதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் வரிச்சூர் செல்வம் விவிஐபி வரிசையில் சென்று எவ்வாறு தரிசனம் செய்தார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி  வரிச்சூர் செல்வம் மீது மதுரை மட்டுமன்றி சென்னை உட்பட பல்வேறு நகரங்களில்  உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  

Related Stories: