சச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை!

லண்டன்: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த ஐசிசி உலக கோப்பை லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உலக கோப்பையில் பங்கேற்ற வீரர்களின் சிறந்த செயல்பாட்டின் அடிப்படையில், சச்சின் தேர்வு செய்துள்ள இந்த அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ள சச்சின், விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை இடம்பெறச் செய்துள்ளார். அனுபவ வீரர் டோனிக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. முன்னதாக... வர்ணனையாளர்கள் இயான் பிஷப், இயான் ஸ்மித், இசா குஹா, கிரிக்கெட் எழுத்தாளர் லாரன்ஸ் பூத், ஐசிசி பொது மேலாளர் (கிரிக்கெட்) ஜெப் அலார்டைஸ் ஆகியோரடங்கிய குழு தேர்வு செய்த உலக கோப்பை அணியில் ரோகித், பூம்ரா என 2 இந்திய வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தேர்வு செய்த அணி விவரம்
எண்    வீரர்    நாடு
1    ரோகித் ஷர்மா    இந்தியா
2    ஜானி பேர்ஸ்டோ (கீப்பர்)    இங்கிலாந்து
3    வில்லியம்சன் (கேப்டன்)    நியூசிலாந்து
4    விராத் கோஹ்லி    இந்தியா
5    ஷாகிப் ஹசன்    வங்கதேசம்
6    பென் ஸ்டோக்ஸ்    இங்கிலாந்து
7    ஹர்திக் பாண்டியா    இந்தியா
8    ரவீந்திர ஜடேஜா    இந்தியா
9    மிட்செல் ஸ்டார்க்    ஆஸ்திரேலியா
10    ஜோப்ரா ஆர்ச்சர்    இங்கிலாந்து
11    ஜஸ்பிரித் பூம்ரா    இந்தியா


Tags : Sachin's chosen World Cup squad, Tony
× RELATED 2023-ம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான ஹாக்கி...