விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்

மும்பை: பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)வுக்கு ₹7 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ₹10 லட்சம் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வருவாய் அங்கீகாரம் மற்றும் சொத்துக்களை பிரிப்பது தொடர்பான விதிமுறைகள் (ஐஆர்ஏசி), நடப்பு கணக்குகளை துவங்குகள் மற்றும் இயக்குதல் ஆகியவை தொடர்பான நடத்தை விதிகள், அதிக அளவு கடன்கள் நிலுவைத் தொகை பற்றி புள்ளி விவரங்களை மத்திய ஒழுங்குமுறை பிரிவுக்கு  (சிஆர்ஐஎல்சி) அறிக்கை சமர்ப்பிக்காதது மோசடி இடர் மேலாண்மை, மோசடிகளை தரம் வாரியாக பிரித்து அறிக்கை சமர்ப்பிக்காதது என விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த 2017 மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் நிதி நிலை  குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ₹7 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்தது.இதேபோல், வாடிக்கையாளர்களின் பணம் மோசடியாக அபகரிப்பதைத்தடுக்க, கடந்த 2016ல் சைபர் கிரைம்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த தவறியதற்காக யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ₹10 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.

Related Stories: