மொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு

புதுடெல்லி: மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து 2வது மாதமாக ஜூன் மாதத்திலும் குறைந்துள்ளது. இது கடந்த 23 மாதங்களில் இருந்ததைவிட மிகக் குறைவாக 2.02 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காய்கறிகள், எரிபொருள், எரிசக்தி பொருள்கள்  ஆகியவை விலை குறைந்ததால் பணவீக்கம் குறைந்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 2.45 சதவீதமாக இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.68 சதவீதமாக இருந்தது. மே மாதம் 6.99 சதவீதமாக இருந்து ஜூனில் 6.98 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் பணவீக்கம் ஜூன் மாதத்தில்24.76 சதவீதமாகக் குறைந்தது அதற்கு முந்தைய மே மாதத்தில் 33.15 சதவீதமாக இருந்தது.

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வில் இருந்ததால் அதன் பணவீக்கம் கடந்த ஜூனில் 16.63 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய மே மாதத்தில் 15.89 சதவீதமாக இருந்தது.மொத்த விற்பனை பணவீக்கம் கடந்த 2017 ஜூலை மாதத்தில் இருந்து 23 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக ஜூன் மாதத்தில் இருந்தது. எரிபொருள், எரிசக்தி பிரிவில் விலை கணிசமாக குறைந்ததால் பணவீக்கம் சரிந்தது. உற்பத்தி பொருள்கள் பிரிவிலும் பணவீக்கம் குறைந்தது. மே மாதம் 1.28 சதவீதமாக இருந்தது ஜூன் மாதம் 0.94 சதவீதமாகக் குறைந்தது.

Related Stories: