100 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் உள்பட 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் உட்பட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்தனர்.சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொடர் திருட்டு வழக்குகள் மற்றும் 8 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி என்.ஆர்.பேட்டையை சேர்ந்த பிரபல கொள்ளையன் நாகமணி (40) மற்றும் 5 கொலை வழக்கில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த அம்பேத் (எ) அம்பேத்கர் (34) மற்றும் 2 கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய கன்னிகாபுரம் புது காலனியை ேசர்ந்த ஸ்டீபன் (37) மற்றும் 3 அடிதடி வழக்கில் தொடர்புடைய பல்லாவரம் திருவள்ளுவர் முதல் தெருவை சேர்ந்த குகன் (30) மற்றும் 5 வழிப்பறி வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவை சேர்ந்த கார்த்திக் (எ) விரல் கார்த்திக் (22) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertising
Advertising

* சென்னை வளையாபதி சாலை முகப்பேறு மேற்கு தெருவை சேர்ந்தவர் நளினி (35). இவரது கணவர் பாலாஜி இறந்துவிட்டார். தனியாக வாழ்ந்த நளினி 2வதாக லக்ஷ்மணகுமார் (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், ஆந்திராவில் தனியார் ஹோட்டலில் மேனேஜராக பணிபுரிகிறார். லக்ஷ்மணகுமார் அடிக்கடி ஆந்திரா சென்று விடுவார். நளினி தன்னுடைய மகன்கள் சாய், சரண் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை மூக்கில் ரத்தம் வந்தபடி நளினி இறந்து கிடந்தார். இதுகுறித்து நளினியின் அண்ணன் பாலாஜி தனது தங்கை சாவில் மர்மம் உள்ளதாகவும் அதனை போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

* மண்ணடி சாலை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அகமது பைசல் (45). பை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரது கடையில் மணிகண்டன் (38) என்பவர் வேலை செய்கிறார். நேற்று மதியம் அகமது பைசல், மணிகண்டன் பைக்கில் அண்ணாசாலைக்கு புறப்பட்டனர். பைக்கை அகமது பைசல் ஓட்டி சென்றார். பூக்கடை முத்துசாமி பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி திடீரென பைக் மீது மோதியதில் அகமது பைசல் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டன் படுகாயமடைந்தார். தகவலறிந்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திர சிங் (43) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: