×

புதுச்சேரி டிஜிபி திடீர் மாற்றம்

புதுச்சேரி: புதுவை டிஜிபியாக சுந்தரி நந்தா பணியாற்றி வருகிறார். ஏற்கனவே டிஜிபியாக 3 வருடம் பணியாற்றிய சுனில்குமார் கவுதம் கடந்தாண்டு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரி நந்தா டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டார்.  இந்த நிலையில் புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தாவை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி டிஜிபியாக, தற்போது மிசோராமில் பணியாற்றி வரும் பாலாஜி வாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சுந்தரி நந்தாவின் தாயார் சமீபத்தில் கோவையில் மரணமடைந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். இந்த நிலையில் புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Puducherry,DGP ,abrupt, change
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...