தபால் துறை தேர்வு ரத்து விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தபால் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதை விஜயகாந்த் வரவேற்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தபால் துறை தேர்வு ரத்து ஆனது என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் அனைத்து கட்சிகளும் தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வகையில் மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தமிழர்களின் உணர்வை மதித்து, தபால் தேர்வை ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசுக்கு தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற தேர்வுகள் தமிழ் மொழியில் எழுத மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும். இந்த தபால் தேர்வை ரத்து செய்திருப்பதை தேமுதிக வரவேற்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: