×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: குறைந்த காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல கிழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவையின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போரூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம், புதுவையயில் மழை நீடிக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% குறைவாக பெய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : Convection, heavy rain, Balachandran
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...