வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.9 லட்சத்து 35 ஆயிரம் பணம் மோசடி

திண்டுக்கல்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி திண்டுக்கல் வாலிபரிடம் ரூ.9 லட்சத்து 35 ஆயிரத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ.வேலு உட்பட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த லட்சுமி தலைமையிலான 10 பேர் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரை சேர்ந்த ராமமூர்த்தி உட்பட 10 பேரிடம் அருகில் உள்ள ஊரை சேர்ந்த மணிகண்டன் தொடர்பு கொண்டார். சிங்கப்பூரில் வேலைவாங்கி தருவதாக கூறி எங்களிடம் ரூ.85 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டார்.

Advertising
Advertising

அதன் பின்பு எங்களிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் மூன்று மாதங்கள் கழித்து கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். பக்கத்து வீட்டுக்காரரிடமும், பைனாஸ்சியரிடமும் பணம் 15 சதவீத வட்டிக்கு வாங்கி கொடுத்தோம். பணம் கொடுத்தவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். இது சம்பந்தமாக மணிகண்டனிடம் கேட்டால், அவர் எங்களை ஆள் வைத்து மிரட்டியும், கொலை செய்து விடுவேன் என்று தனித்தனியாக மிரட்டுகிறார். எனவே எங்களுக்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போலீசில் புகார் அளித்தும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தும் பயன் இல்லை. என்றனர். இந்த மனு எஸ்.பி., அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்ததினார்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கூறியதாவது, ‘சிங்கப்பூரில் பல்ப் கம்பெனியில் வேலைவாங்கி தருவதாக மணிகண்டன் தொடர்ந்து எங்களிடம் பணம் வசூலித்தார். எங்களுக்கு மருத்துவ பரிசோதனை உட்பட பல சோதனைகளையும் செய்ய சொன்னார். நாங்கள் முழுமையாக நம்பினோம். இப்படி மோசடி நடக்கும் என்று தெரியவில்லை. வட்டிக்கு வாங்கியவர்களுக்கு பயந்து நாங்கள் மறைந்து வாழ வேண்டியுள்ளது. போலீசாரும் எங்கள் பிரச்னைகளை கேட்பதில்லை. போலீசில் புகார் அளித்தால், எங்களிடம் கேட்டா பணம் கொடுத்தீர்கள். உங்கள் இஷ்டம் போல் கொடுத்து விட்டு, எங்களிடம் வசூலித்து கொடுங்கள் என நச்சரிப்பதா என எரிச்சல் அடைகின்றனர். இதனால் நிம்மதி இழந்த தவிக்கிறோம்’ என்றனர்.

Related Stories: