×

இனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க பெண் எம்பி-க்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்பின் இனவெறி ரீதியிலான கருத்துக்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமெரிக்க பெண் எம்.பி-க்கள் ரஷீதா தலீப், ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்கள் ஆவர். பெண் எம்.பிக்களின் எதிர்ப்பால் அதிருப்தியடைந்த டிரம்ப், தனது த்விட்டேர் பக்கத்தில் அவர்களின் இனவெறியை தூண்டும் வகையில் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் வாஷிங்டனில் பேசிய டிரம்ப், தமது கருத்தில் தவறு ஒன்றும் இல்லை என தெரிவித்தார். அரசு திட்டங்கள் மீது அதிருப்தியடைபவர்கள் அமெரிக்காவை விட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு செல்லலாம் என்று ட்ரம்ப் சாடினார்.

மேலும், தங்கள் நாட்டை வெறுப்பவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டதை சுட்டிக்காட்டினார். இதை சிலர் சர்ச்சையாக பார்க்கின்றனர். ஆனால், பலர் அதை ஆதரிக்கின்றனர் என தெரிவித்தனர். இந்த நிலையில் வாஷிங்டனில் கூட்டாக பேசிய பெண் எம்.பிக்கள் 4 பேரும், அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மோசமான ஆட்சி குறித்த விமர்சனத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே ட்ரம்ப் தங்கள் மீது பாய்ச்சல் காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எம்.பி.,ரஷீதா தலீப் அமெரிக்காவில் பிறந்தாலும் அவரது பூர்விகம் பாலஸ்தீனம் ஆகும். இல்ஹான் உமர் சோமாலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய இஸ்லாமிய பெண் ஆவார். இதையடுத்து ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி ஆகியோர் அமெரிக்காவில் பிறந்தாலும் பூர்விகம் வேறு நாடுகள் ஆகும்.

Tags : President Trump, Citizenship Law, Female MPs
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு