×

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

ஜகார்தா; இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது . இதனால், அந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் பாலி பிராந்திய பகுதியில் 00.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் எதிரொலியாக கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன.

பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதம் குறித்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர்  23-ம் தேதி இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Earthquake in Indonesia
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...