×

ஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவு

புதுடெல்லி: கடந்த மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2,501 கோடி டாலராக உள்ளது. இது முந்தை ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.71 சதவீதம் சரிவு. இதற்கு நவரத்தினங்கள், ஆபரணங்கள், இன்ஜினியரிங், பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி சரிவே காரணம்.  இதுபோல் இறக்குமதியும் கடந்த மாதத்தில் 9 சதவீதம் சரிந்து 4,029 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை சரிவே இதற்கு காரணம். வர்த்தக பற்றாக்குறை 1,528 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் இது 1,660 கோடியாக இருந்தது.





Tags : Exports fell, cent
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...