5 ஆண்டுகளுக்கு மேல் தொடராமல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 50% பேர் பாதியிலேயே நிறுத்திவிடுவது ஏன்?

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி உள்பட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் 5 ஆண்டுகள் வரையில்தான் தொடர்ந்து பணம் செலுத்துகின்றனர். அதன் பின்னர் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். . போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்று இன்சூரன்ஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆனால், சமீபகாலமாக இந்த பின்னடைவான போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 மாதங்களுக்கு பின்னர் பாலிசிக்கு பணம் செலுத்தாமல் நிறுத்துவிடும் போக்கு குறையத் தொடங்கியுள்ளது.   ஆயுள் காப்பீடு பாலிசிகளில் பணம் செலுத்துபவர்களுக்கு போதிய அளவு பலன்கள் இல்லை என்பதால் அதில் ஆர்வம் செலுத்தாமல் பணம் கட்டுவதை நிறுத்திவிடுகின்றனர்.

Advertising
Advertising

மேலும் பாலிசி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது இன்சூரன்ஸ் துறையில் போட்டிகள் அதிகமானதால், பொதுமக்கள் இடையே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது பாலிசி திட்டங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறி, பாலிசி காலம் முடிந்தவுடன் கிடைக்கக் கூடிய பண பலன்கள் குறித்தும் இடையில் கிடைக்கக்கூடிய பண பலன்கள் குறித்து எடுத்துக் கூறுகின்றனர். இதனால், தற்போது பாதியில் நிறுத்தும்போக்கு குறையத் தொடங்கியுள்ளது என்று இன்சூரன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: