×

மதுரவாயல்-எண்ணூர் துறைமுகம் பறக்கும் சாலை அமைக்க திட்டம்

சென்னை: சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மானியக்கோரி க்கையின் போது எதிர்க்கட்சி துணைதலைவர் துரைமுருகன் பேசியதாவது: நெடுஞ்சாலைத்துறையில் 3 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த 2018-19ல் 9741 கோடி திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 7363 கோடிதான் செலவிட ப்பட்டுள்ளது. 1,878 கோடி சரண்டர் செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : பல்வேறு பிரச்னை காரணமாக திட்டப்பணிகளை தொடங்குவதில் சிக்கல் உள்ளது. அதனால், தான் குறிப்பிட்ட காலங்களில் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது.  துரைமுருகன் : பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் : தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். துரைமுருகன் : மதுரவாயல்- எண்ணூர் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் நல்ல திட்டம். அதை உடனடியாக தொடங்க வேண்டும். முதல்வர் எடப்பாடி : மதுரவாயல்- எண்ணூர் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை பணிக்கு கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டது. இதனால் வெள்ளகாலங்களில் தண்ணீரை அந்த தூண்கள் தடுக்கும் நிலை ஏற்பட்டதால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்புள்ளது. எனவே தான் அந்த திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மதுரவாயல்-எண்ணூர் துறைமுகம் சாலை பணியை தொடங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Maduraivayal , Nunnur port
× RELATED ஜன.29ம் தேதி முதல் பிப். 6 வரை நடத்த...