மக்களவையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஆகியோர் கேட்ட கேள்விக்கு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் நேற்று பதிலளித்து பேசியதாவது:தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டாக ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களால் இதுவரை விவசாயத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.தமிழகத்தில் மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: